Saturday, 30 May 2015

தாய்மை

ஒவ்வொரு முறையும் அம்மாவுடன் கோயிலுக்குச் செல்லும்போதும், கோயில் சிலைகளிடம் காட்டி விட்டு வருகிறேன் என் கடவுளை.


அன்பே கடவுள். 


அந்த மாசற்ற அன்புதான் கடவுள் என்றால்.....தாய்தான் நம் கண்முன்னே தோன்றியிருக்கின்ற கடவுள்.


உலகின் அனைத்து உறவுகளூம் ஏதாவது ஒரு எதிர்ப்பார்ப்பின் அடிப்படையில்தான் அமைந்திருக்கும். ஆனால், தாய் அன்பு மட்டுமே எந்த ஒரு எதிர்ப்பார்ப்பும் இன்றி தூய்மையான புனித அரவணைப்பால் கட்டப்பட்ட பாசக்கயிறாக இருக்கின்றது.
இயற்கையின் சுழற்சியாகட்டும் பிரபஞ்சத்தின் அதிர்வுகளாகட்டும் அனைத்தும் தாய்மையின் வடிவமாகவே சித்தரிக்கப்படுகின்றன. தன் சேய் தன்னை சேதமாக்கினாலும், தன் சேவையை மட்டுமே அள்ளித் தெளிக்கும் தாய்மையின் முன் அனைத்தும் தவிடுபொடியாகும்.
இன்றையக் கால கட்டத்தில் பெண்கள் பல்வேறு துறைகளில் தனித்துவத்தோடு மிளிர்கின்றார்கள். இவர்களின் அபார சாதனைகள் இந்த மனிதக்குலத்தின் மாபெரும் வளர்ச்சிக்கு வித்தாக அமைகின்றன.
அந்த வகையில் ஒவ்வொரு பெண்களும் தங்களுடையப் பருவ வளர்ச்சியில் மிக புனிதமானதாக போற்றப்படும் தாய்மையை விவேகமாக ஏற்க வேண்டும். 
தங்கள் பொறுப்புணார்ந்து ஒவ்வொரு தாயாரும் தரணியில் தடம் பதிக்கத் தொடங்கிவிட்டால் நிச்சயம் நம் சமுதாயத்திலும் தவறுகளும் தடம் மாறுதல்களூம் தடுக்கப்படும்....
அம்மா என்ற  ஒரு சொல் போதும்…..
உதிரம் முழுதும் அன்பென்ற உணர்வால் உறைந்து போகும்…..
தாய் காலடியே சொர்கம் என்பதை உணர்வோம்

No comments:

Post a Comment