Wednesday, 24 June 2015

எண்ணம் - Thought

எண்ணம் - உணர்வின் உரு சொல் - நாவின் முக்தி காற்றொலி, செயல் - காற்றொலியின் மோட்சம்
நான் வீழ்த்த இயலா ஆயுதம்; வீழ்ந்து போகா மானுடன் ; இறைவன் இரைந்து தேடினாலும், இறந்து தேடினாலும் இருப்பது நிஜம்!
அன்பு ஆடைகளையும் பாத்திரங்களையும் களைத்து விட்டு ஆணவத்தையும் பேதமையையும் கழற்றி விட்டு உன்னில் என்னைக் காணும் கலை – அன்பு
கேமிரா முன்
ஐம்புலன்களின் செயலாக்கம் தத்தம் திறனை வெளிக்கொணர துடிதுடிக்கும் தருணம். ‘ஏக்‌ஷன்’ என் வார்த்தைகளும் கரங்களும் களம் காணும் நொடிகள். 
மெல்லிதாய் ஒரு புன்முறுவல், கண்டிப்பாக இந்த முறை ‘டேக் ஓக்கே’ ஆகிவிடும் என்ற தன்னம்பிக்கை ஒளி மெல்ல மெல்ல கரைத்தொடும் நொடி......நா சற்று உளரிவிடும்......தவறு செய்து விட்டேன் என்பதற்கு அடையாளமாய் இதழ்க் கதவுகளைத் தட்டாமலேயே நாவின் தரிசனம்.....கேமிரா அதையும் பதிவு செய்துவிடும்..
நான் என்னைச் சுதாகரித்துக் கொண்டு மீண்டும் அடுத்த ‘டேக்’குக்கு தயாராகிறேன். இந்த முறை வார்த்தைகளின் வீச்சும் கரங்களின் ருத்ரமும் படுவேகத்தில் இருக்கும். என் விழிகளின் விரிப்பிலும் கொஞ்சம் ஆணவம் கலந்திருக்கும். ‘டேக் ஓக்கே’ இந்த முறை வெற்றியைப் பதிவு செய்யும் கேமிரா......என் சினேகிதன்.............!!!

ஒலிப்பெருக்கி
காலை மணி 4.00 க்கு எழுந்து, மின்னல் வேகத்துல கிளம்பி, என் காரில் அந்த காலை பயணம். கருமையைக் கிழித்து வெளியே வர துடிக்கும் பகலின் பரிதவிக்கும் கோலம் வானில். 
சரியா 40 நிமிஷத்துல கார் பயணமும் கால் பயணமும் முடிவுக்கு வரும். நான் அந்த ‘இக்லு’(igloo) அறைக்குள் காலடி எடுத்து வைப்பேன்.


நாளிதழ்களின் தலைப்புச் செய்திகள தொகுத்துட்டு, பாடல்களின் வரிசைய சரி பார்த்துட்டு, ஓர் இளவரசி போல சிம்மாசனத்த ஆசையோடு பார்ப்பேன்....இந்த ஆசைப் பார்வை ஒவ்வொரு முறையும் புதிசு புதுசா வண்ணக் கோலம் போடும். நான் இப்போ சிரித்தேனா?

....தெரியல....ஆனா...புதுசா ஒரு தெம்பு அப்படியே உச்சந் தலையில இருந்து உள்ளங் காலுக்குப் பாய்ச்சிறதுக்கு முன்னாடி.....தொண்டை வளையிலே ஒரு சொட்டுத் தமிழித் தேன சிந்திட்டு போகும். 

இப்போ நா, அந்த கருப்பு ஒலிப்பெருக்கி முன் காந்தம் மாதிரி இழுக்கப் படும் தருணம்.

எல்லாமே கண் முன்னாடி காட்சியா வரும். அந்தக் காட்சிக்கு வர்ணனை தரும் வார்த்தைகள் முண்டியடித்து கொண்டு சிதறும்.....தொண்டை வளையில சிதற விரையும் வார்த்தைகள வரிசைப் படுத்துற பொறுப்பு சிந்தனையோடது. பொறுப்பு முடிந்த பிறகு உதடுகள் மலர நாவின் பணி நளினத்தோடு தொடுங்கும்.
அந்த ஒலிப்பெருக்கி ஒய்யாரமா என்ன பார்த்து கண்ணடிக்கும். நானும் பதிலுக்கு அடுத்த மணித்துளிகள் கள்வனின் காதலியா மாறிப் போயிடுவேன்.
"காலை மணி 6.30. வணக்கம் அன்பு நேயர்களே. இந்த நாள் இனிய நாள்...மீண்டும் ஒரு உற்சாகமான ஞாயிற்றுக் கிழமைக் காலை பொழுதில் உங்களைச் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. நான் சத்தியா".






 S)ssss  H)    hh   A)aa   T)tttttt H)    hh I)iiii Y)    yy   A)aa   H)    hh 
S)    ss H)    hh  A)  aa     T)    H)    hh   I)    Y)  yy   A)  aa  H)    hh 
 S)ss    H)hhhhhh A)    aa    T)    H)hhhhhh   I)     Y)yy   A)    aa H)hhhhhh 
     S)  H)    hh A)aaaaaa    T)    H)    hh   I)      Y)    A)aaaaaa H)    hh 
S)    ss H)    hh A)    aa    T)    H)    hh   I)      Y)    A)    aa H)    hh 
 S)ssss  H)    hh A)    aa    T)    H)    hh I)iiii    Y)    A)    aa H)    hh 
                                                                               
                                                                               


No comments:

Post a Comment