Thursday 30 July 2015

“ரெஸ்ட் DAY”

“பத்து மணிக்கு எழுந்திரிக்கிறா, ஞாயிற்றுக்கிழமைனா என்னா? ரெஸ்ட் வேணுங்கிறதுக்காக பத்து மணிக்கா எழுந்திரிக்கிறது?” லட்சுமியம்மா எரிச்சலோடு சொல்கின்ற வார்த்தைகளுக்கு “உம்” கொட்டிக்கொண்டிருந்தார் பக்கத்து வீட்டு பாக்கியம்.
“ஏண்டா, ஆம்புள புள்ள, நீ போயாடா சமையல் கட்டுல நிப்ப? உம் பொண்டாட்டிய ரெஸ்ட் எடுக்க சொல்லிட்டு இப்படி நீ அடுப்புல வேகனுங்கற அவசியம் என்னடா கிடக்கு?” லட்சுமியம்மா கோபத்தோடு பேசிய வார்த்தைகளைக் காதில் கேளாதவனாய் சமையலறையில் சுழன்றுக் கொண்டிருந்தான் மோகன்.
மருமகள் படுத்திருக்கும் அறையை அணலோடும் கணலோடும் பார்த்துவிட்டு, சமையலறையில் பேதையாய் சமையலைச் செய்துக் கொண்டிருந்த மகனை விரக்தியோடு பார்த்தார் லட்சுமியம்மா.
வாய்க்குள் எதையோ முனகியவாறே, அந்த மேசை மேல் அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த ஆரஞ்சு பழம் ஒன்றையும் கொஞ்சம் கைக்கொள்ளும் அளவு திராட்சைப் 
பழங்களையும் அள்ளிக் கொண்டு நடந்தார் லட்சுமியம்மா. மகன் வீட்டிலிருந்து அடுத்த வரிசை வீடுகளில் ஒன்றான மகள் வீட்டுக்குள் உத்வேகத்தோடு காலடி எடுத்து வைத்தார்.
“பாட்டி” என ஓடோடி வந்த பேத்தியைத் தூக்குவதற்கு முன், “இந்தாடி செல்லம்....எல்லாம் உனக்குத்தா” என்று கையிலிருந்தப் பழங்களைப் பேத்தியின் கரங்களுக்குள் புகுத்தினார் லட்சுமியம்மா. “அம்மா எங்கடா காணோம், கோயிலுக்கு போயிட்டாங்களா?” என்றார்.
“ஐயோ பாட்டி இன்னைக்கு ஞாயிற்றுக்கிழமை, அம்மாக்கு ரெஸ்ட் day, அப்பாத்தான் எல்லா வேலையும் செய்யனும்....அம்மா எழுந்திருக்க 12 மணி ஆகும். ம்ம்ம்ம்ம்... இன்னைக்குக்கு சிக்கன் கறி....அப்பா ஸ்பெஷல்….”
படுக்கையறையில் ஆழ்ந்து உறங்க்கிக் கொண்டிருந்த மகளைப் பாவமாய் பாசமாய் எட்டிப் பார்த்து விட்டு, சமையல் அறையில் பம்பரமாய் சுழன்றுக் கொண்டிருந்த மருமகனைப் பெருமிதத்தோடு பார்த்தார் லட்சுமியம்மா.
Shathiyah Kristian

Wednesday 24 June 2015

எண்ணம் - Thought

எண்ணம் - உணர்வின் உரு சொல் - நாவின் முக்தி காற்றொலி, செயல் - காற்றொலியின் மோட்சம்
நான் வீழ்த்த இயலா ஆயுதம்; வீழ்ந்து போகா மானுடன் ; இறைவன் இரைந்து தேடினாலும், இறந்து தேடினாலும் இருப்பது நிஜம்!
அன்பு ஆடைகளையும் பாத்திரங்களையும் களைத்து விட்டு ஆணவத்தையும் பேதமையையும் கழற்றி விட்டு உன்னில் என்னைக் காணும் கலை – அன்பு
கேமிரா முன்
ஐம்புலன்களின் செயலாக்கம் தத்தம் திறனை வெளிக்கொணர துடிதுடிக்கும் தருணம். ‘ஏக்‌ஷன்’ என் வார்த்தைகளும் கரங்களும் களம் காணும் நொடிகள். 
மெல்லிதாய் ஒரு புன்முறுவல், கண்டிப்பாக இந்த முறை ‘டேக் ஓக்கே’ ஆகிவிடும் என்ற தன்னம்பிக்கை ஒளி மெல்ல மெல்ல கரைத்தொடும் நொடி......நா சற்று உளரிவிடும்......தவறு செய்து விட்டேன் என்பதற்கு அடையாளமாய் இதழ்க் கதவுகளைத் தட்டாமலேயே நாவின் தரிசனம்.....கேமிரா அதையும் பதிவு செய்துவிடும்..
நான் என்னைச் சுதாகரித்துக் கொண்டு மீண்டும் அடுத்த ‘டேக்’குக்கு தயாராகிறேன். இந்த முறை வார்த்தைகளின் வீச்சும் கரங்களின் ருத்ரமும் படுவேகத்தில் இருக்கும். என் விழிகளின் விரிப்பிலும் கொஞ்சம் ஆணவம் கலந்திருக்கும். ‘டேக் ஓக்கே’ இந்த முறை வெற்றியைப் பதிவு செய்யும் கேமிரா......என் சினேகிதன்.............!!!

ஒலிப்பெருக்கி
காலை மணி 4.00 க்கு எழுந்து, மின்னல் வேகத்துல கிளம்பி, என் காரில் அந்த காலை பயணம். கருமையைக் கிழித்து வெளியே வர துடிக்கும் பகலின் பரிதவிக்கும் கோலம் வானில். 
சரியா 40 நிமிஷத்துல கார் பயணமும் கால் பயணமும் முடிவுக்கு வரும். நான் அந்த ‘இக்லு’(igloo) அறைக்குள் காலடி எடுத்து வைப்பேன்.


நாளிதழ்களின் தலைப்புச் செய்திகள தொகுத்துட்டு, பாடல்களின் வரிசைய சரி பார்த்துட்டு, ஓர் இளவரசி போல சிம்மாசனத்த ஆசையோடு பார்ப்பேன்....இந்த ஆசைப் பார்வை ஒவ்வொரு முறையும் புதிசு புதுசா வண்ணக் கோலம் போடும். நான் இப்போ சிரித்தேனா?

....தெரியல....ஆனா...புதுசா ஒரு தெம்பு அப்படியே உச்சந் தலையில இருந்து உள்ளங் காலுக்குப் பாய்ச்சிறதுக்கு முன்னாடி.....தொண்டை வளையிலே ஒரு சொட்டுத் தமிழித் தேன சிந்திட்டு போகும். 

இப்போ நா, அந்த கருப்பு ஒலிப்பெருக்கி முன் காந்தம் மாதிரி இழுக்கப் படும் தருணம்.

எல்லாமே கண் முன்னாடி காட்சியா வரும். அந்தக் காட்சிக்கு வர்ணனை தரும் வார்த்தைகள் முண்டியடித்து கொண்டு சிதறும்.....தொண்டை வளையில சிதற விரையும் வார்த்தைகள வரிசைப் படுத்துற பொறுப்பு சிந்தனையோடது. பொறுப்பு முடிந்த பிறகு உதடுகள் மலர நாவின் பணி நளினத்தோடு தொடுங்கும்.
அந்த ஒலிப்பெருக்கி ஒய்யாரமா என்ன பார்த்து கண்ணடிக்கும். நானும் பதிலுக்கு அடுத்த மணித்துளிகள் கள்வனின் காதலியா மாறிப் போயிடுவேன்.
"காலை மணி 6.30. வணக்கம் அன்பு நேயர்களே. இந்த நாள் இனிய நாள்...மீண்டும் ஒரு உற்சாகமான ஞாயிற்றுக் கிழமைக் காலை பொழுதில் உங்களைச் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. நான் சத்தியா".






 S)ssss  H)    hh   A)aa   T)tttttt H)    hh I)iiii Y)    yy   A)aa   H)    hh 
S)    ss H)    hh  A)  aa     T)    H)    hh   I)    Y)  yy   A)  aa  H)    hh 
 S)ss    H)hhhhhh A)    aa    T)    H)hhhhhh   I)     Y)yy   A)    aa H)hhhhhh 
     S)  H)    hh A)aaaaaa    T)    H)    hh   I)      Y)    A)aaaaaa H)    hh 
S)    ss H)    hh A)    aa    T)    H)    hh   I)      Y)    A)    aa H)    hh 
 S)ssss  H)    hh A)    aa    T)    H)    hh I)iiii    Y)    A)    aa H)    hh 
                                                                               
                                                                               


Saturday 30 May 2015

தாய்மை

ஒவ்வொரு முறையும் அம்மாவுடன் கோயிலுக்குச் செல்லும்போதும், கோயில் சிலைகளிடம் காட்டி விட்டு வருகிறேன் என் கடவுளை.


அன்பே கடவுள். 


அந்த மாசற்ற அன்புதான் கடவுள் என்றால்.....தாய்தான் நம் கண்முன்னே தோன்றியிருக்கின்ற கடவுள்.


உலகின் அனைத்து உறவுகளூம் ஏதாவது ஒரு எதிர்ப்பார்ப்பின் அடிப்படையில்தான் அமைந்திருக்கும். ஆனால், தாய் அன்பு மட்டுமே எந்த ஒரு எதிர்ப்பார்ப்பும் இன்றி தூய்மையான புனித அரவணைப்பால் கட்டப்பட்ட பாசக்கயிறாக இருக்கின்றது.
இயற்கையின் சுழற்சியாகட்டும் பிரபஞ்சத்தின் அதிர்வுகளாகட்டும் அனைத்தும் தாய்மையின் வடிவமாகவே சித்தரிக்கப்படுகின்றன. தன் சேய் தன்னை சேதமாக்கினாலும், தன் சேவையை மட்டுமே அள்ளித் தெளிக்கும் தாய்மையின் முன் அனைத்தும் தவிடுபொடியாகும்.
இன்றையக் கால கட்டத்தில் பெண்கள் பல்வேறு துறைகளில் தனித்துவத்தோடு மிளிர்கின்றார்கள். இவர்களின் அபார சாதனைகள் இந்த மனிதக்குலத்தின் மாபெரும் வளர்ச்சிக்கு வித்தாக அமைகின்றன.
அந்த வகையில் ஒவ்வொரு பெண்களும் தங்களுடையப் பருவ வளர்ச்சியில் மிக புனிதமானதாக போற்றப்படும் தாய்மையை விவேகமாக ஏற்க வேண்டும். 
தங்கள் பொறுப்புணார்ந்து ஒவ்வொரு தாயாரும் தரணியில் தடம் பதிக்கத் தொடங்கிவிட்டால் நிச்சயம் நம் சமுதாயத்திலும் தவறுகளும் தடம் மாறுதல்களூம் தடுக்கப்படும்....
அம்மா என்ற  ஒரு சொல் போதும்…..
உதிரம் முழுதும் அன்பென்ற உணர்வால் உறைந்து போகும்…..
தாய் காலடியே சொர்கம் என்பதை உணர்வோம்

Sunday 24 May 2015

அந்திமம்









கிழக்கு வானம் சிவந்த கோலம் - 
இந்த கிழவனின் நரையையும் சிவக்க வைத்தது
கொஞ்சம் கடலையும் பரந்து பார்க்கிறேன்
எஞ்சும் என் நாட்களின் நீளம் தெரிந்தது
மேகத்துள் ஊடுறுவும் ஒளி போல
நினைவுகள் உள்ளத்தும் ஒளிர்கிறது
சுவடுகள் அழித்து புரளும் அலையே - என்
மனச்சுமைகளும் அழித்து போ!!!

என்னவள் சென்ற வலி போதும்
மனையவள் போன வழியில் போகும்
நாளுக்காய் காத்திருக்கிறேன்
அணைத்து கொள் பிரபஞ்சமே
அந்திமக் காலம் அஸ்த்தமனமாகட்டும்!